ஆதாருடன் செல்போன் எண்ணை 15-ந்தேதிக்குள் இணைக்க அறிவுறுத்தல்


ஆதாருடன் செல்போன் எண்ணை 15-ந்தேதிக்குள் இணைக்க அறிவுறுத்தல்
x

ஆதாருடன் செல்போன் எண்ணை 15-ந்தேதிக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை வருகிற 15-ந்தேதிக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. PM KISAN இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP அங்கீகாரத்தை பயன்படுத்தி e-KYC பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு விவசாயிகள் தங்களின் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசிய மாகும். அருகில் உள்ள அஞ்சலகங்களிலோ, தபால்காரர் மூலமாகவோ, கிராம அஞ்சல் ஊழியரை அணுகியோ விவசாயிகள் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ.50 பெறப்படுகிறது. அதன் பின்னர் https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற PM KISAN இணையதளத்தில் அல்லது PM KISAN செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP அங்கீகாரத்தை பயன்படுத்தி e-KYC செய்து கொள்ளலாம். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அஞ்சலகங்கள், அஞ்சல் ஊழியர்களை அணுகியும் இந்த சேவையை பெறலாம்.

இதேபோல அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் ஆதார்-மொபைல் எண் இணைத்தல், திருத்தம் செய்தல், மின்சார வாரியம் அறிவித்து உள்ள ஆதார் எண் இணைப்பு மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் போன்ற சேவைகளும் அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்தார்.


Next Story