ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா இன்று நடக்கிறது


ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா  இன்று நடக்கிறது
x

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் இன்று ஆராட்டு விழா நடக்கிறது.

கன்னியாகுமரி

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் இன்று ஆராட்டு விழா நடக்கிறது.

கும்பாபிஷேகம்

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்பு தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்கிறார்கள்.

இங்கு கடந்த 9-ந் தேதி முதல் சிறப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல் போன்றவை நடந்தது.

நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதலும், நேற்று இரவு சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

ஆராட்டு விழா

விழாவில் இன்று (வியாழக்கிழமை) ஆராட்டு விழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, மங்கள ஆராத்தி, காலை 9 மணிக்கு ஆராட்டு பலி, ஆராட்டுக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

காலை 10 மணிக்கு பூவங்கா பறம்பு ஆதிராவின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. 11 மணியளவில் பரளியாறு பாயும் கிழக்கு நடையில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story