அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
பெருந்தோட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட மீனவர் அணி தலைவர் முத்து, மாணவரணி செயலாளர் மாறன், ஊராட்சி மன்ற தலைவர் சரளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் சிவ மனோகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story