அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு: 2 வாரத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு: 2 வாரத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கை 2 வாரத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.

இதற்கிடையே இந்த மனு மீதான உத்தரவு நேற்று வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களை இந்த உத்தரவு கிடைக்கப்பெறும் நாளில் இருந்து சென்னை ஐகோர்ட்டு 2 வாரத்தில் விசாரித்து தீ்ர்ப்பு கூற வேண்டும். அதுவரை தற்போது உள்ள நிலையையே இருதரப்பினரும் பின்பற்ற வேண்டும். இந்த மனுக்களின் தகுதிபாடுகள் தொடர்பாக எவ்வித கருத்துகளையும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சென்னை ஐகோர்ட்டு சுயமாக சட்டப்படி விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story