அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தூத்துக்குடி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டு, அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம், பழைய பஸ் நிலையம் முன்பு ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாநில அ.தி.மு.க. அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, சார்பு அணி செயலாளர்கள் வீரபாகு, பில்லா விக்னேஷ், ஜெ.தனராஜ், முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகன்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story