மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அ.தி.மு.க. சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, திருச்சி மாநகர் மாவட்டத்தில் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.தங்கமணி, திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான என்.தளவாய்சுந்தரம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.ராம்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை பொறுப்பேற்று நடத்துவார்கள்.

தேனியில் ஆர்.பி.உதயகுமார்

இதேபோல, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் நாகை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், தேனி மாவட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரம்பலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, அமைப்பு செயலாளர் வரகூர் அ.அருணாசலம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை பொறுப்பேற்று நடத்துவார்கள்.

இந்த மாவட்டங்களை சேர்ந்த தலைமைக்கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னையை பொறுத்தவரை கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்டங்களும் ஒன்றிணைந்து, ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும். ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story