அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர், திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போளூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசுகையில், 'தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது. மாறாக பால் விலை, சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என்றார்.

முன்னதாக ஒன்றிய செயலாளர் ஜெயசுதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி செயலாளர் பாண்டுரங்கன் உள்பட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்


Next Story