அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை


அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நாளை(திங்கட்கிழமை) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. நாளையில் இருந்து 2 வாரத்துக்குள் இந்த வழக்கை நீதிபதி விசாரித்து தீர்ப்பு அளிப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கூறினர்.


Next Story