திருப்பத்தூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்ததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.டி.குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கே.எம்.சுப்பிரமணியம், ஆர்.நாகேந்திரன், அவைத்தலைவர் ரங்கநாதன், தம்பாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ரமேஷ், மணிகண்டன், தாமலேரிமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாஇளங்கோ, மாவட்ட மாணவரணி செயலாளர் தனஞ்செயன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story