அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டில் நுழைய முயன்றதாக செம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியை அப்பகுதி மக்கள் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அந்த வாலிபர் கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக நீதிபதி முத்து இசக்கி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தங்கப்பாண்டி உடலை அவரது உறவினர் வாங்க மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் வாலிபர் தங்கப்பாண்டி மரணத்திற்கு நீதி கேட்டு அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் யோகா வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர். தங்கப்பாண்டி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணிச் செயலாளர் மோகனவேல், சிறுபான்மை பிரிவு செயலாளர் சேரன் இஸ்மாயில், அன்சாரி, இலக்கியப் பிரிவு செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.