நெல்லையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


நெல்லையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடப்பட்டுள்ளதை கண்டித்தும், இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் நெல்லையில் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்கட்சியினர் மீது வழக்கு

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியினரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். கருணாநிதி முதல்-அமைச்சராக இருக்கும்போதும் இதைப்போன்று பல்வேறு வழக்குகளை போட்டுள்ளார். தற்போது மு.க.ஸ்டாலினும் அந்த வழியில் எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அப்படி எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போடும் பழக்கம் இல்லை.

எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை உடனே ரத்து செய்யவேண்டும். இல்லை எனில் போராட்டம் தொடரும். எடப்பாடி பழனிசாமியை நெல்லைக்கு அழைத்து வந்து கிராமம் கிராமமாக சென்று பேச வைக்க உள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.பி.ஆதித்தன், மைக்கேல் ராயப்பன், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணைச்செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, துணைத்தலைவர் வள்ளியூர் சுந்தர், வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், அந்தோணி அமல்ராஜா, கே.பி.கே.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story