அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே துஞ்சனூர் கிராமத்தில் அங்கேயர் கன்னி அம்மையார் உடனுறை அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து யாக சாலையில் கலசங்களில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்திருந்த கலசங்களை சுமந்து கொண்டு சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். இதையடுத்து கோவில் கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story