மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் பகுதியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் பத்மகுமரேசன், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு.சின்னயைன், கைத்தறி பிரிவு மாநில செயலர் லெனின், சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அயூப்கான், ஊராட்சித்தலைவர் மலர்கொடி, மகளிரணியை சேர்ந்த கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாச்சியார்கோவில்

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் திருவிடைமருதூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

கபிஸ்தலம் பாலக்கரையில் பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் சண்முக பிரபு, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, கோபிநாதன், பேரூர் செயலாளர்கள் சின்னையன், கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story