கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் நூதன போராட்டம்


கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்    வாலிபர் நூதன போராட்டம்
x

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கடலூர்


கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் முகத்தில் சந்தனம் பூசிக் கொண்டும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டும் நூதன முறையில் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் தான் கொண்டு வந்திருந்த மருந்து, மாத்திரைகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் வேலையின்றி இருப்பதால் மருந்து, மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்படுவதும், அதனால் இலவசமாக மருந்து-மாத்திரைகள் வழங்குவதுடன், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளிக்க வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், மணிகண்டனிடம் உங்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட மணிகண்டன், போராட்டத்தை கைவிட்டு, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு சென்றார்.


Next Story