விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்


விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகின. எனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகின. எனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர்கள் அழுகின

திருவெண்காடு மற்றும் சின்ன பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், திருவாலி, நாங்கூர், நாராயணபுரம், மங்கை மடம், பெருந்தோட்டம், மணி கிராமம் மற்றும் வானகிரி உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் கடந்த வாரம் பெய்த கனமழையால் நீரில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு வாரம் வரை வயில்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. கடந்த 2 நாட்களாக வெள்ள நீர் வடிய தொடங்கிய நிலையில், நீரில் மூழ்கி இருந்ததால் நெற்பயிர்கள் அழுக தொடங்கியுள்ளன. இதனால் மிகுந்த வேதனையில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், மேற்கண்ட பகுதிகள் அனைத்தும் கடற்கரை பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர் ஓவர் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக குறுவை சாகுபடியை மேற்கொள்வதில்லை, சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருகிறோம். தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட கூடுதலாக பெய்ததால் சாம்பா சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபட்டோம். ஆனால் கடந்த வாரம் 2 முறை பெய்த பலத்த மழையால் அனைத்து நெல் வயல்களும் நீரில் மூழ்கின.

விவசாய கடன்கள் தள்ளுபடி

தற்போது வெள்ள நீர் வடிய தொடங்கிய நிலையில் நெற்பயிர்கள் முற்றிலும் அழுகி காணப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் வரை செலவானது. கூட்டுறவு சங்கம் மற்றும் தனி நபர்களிடமிருந்து கடன்களை பெற்று நடவுப் பணிகளை மேற்கொண்டோம். தற்போது அனைத்தையும் இழந்து உள்ளோம். எனவே தமிழக அரசு உச்சபட்ச நிவாரண தொகையை வழங்க வேண்டும். அதேபோல் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இந்த ஆண்டு விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.


Next Story