பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

பெரம்பலூர் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் குமரிமன்னன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும், சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களது வார்டுகளில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தர இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், மாதத்திற்கு ஒரு முறை நகர்மன்றக் கூட்டத்தை அவசியம் கூட்ட வலியுறுத்தியும், சொத்து வரி விதிப்பு உயர்வை கண்டித்தும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பழனிசாமி, தனமணி, லட்சுமி சரவணன் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக, கூட்டம் தொடங்க தாமதமானது. தி.மு.க., அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் சிலர் நகர்மன்ற கூட்டத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மற்ற கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வருவதற்கு தாமதம் ஆனதால், கூட்டமன்றத்தில் காத்திருந்த கவுன்சிலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். பின்னர், நகர்மன்ற கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் சொத்து வரி உயர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே சில கவுன்சிலர்கள் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு சென்றுவிட்டு வந்ததால், கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story