ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் அய்யப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயமணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு முடித்து வைக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 81 மாதமாக வழங்காமல் நிலுவையில் உள்ள பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். சுழல்முறை பணி வழங்குவதை கைவிட வேண்டும். தனியார் ஏஜென்சி மூலம் டிரைவர்களை நியமிக்க கூடாது. சென்னையில் 1000 பஸ்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story