கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆக்கி போட்டி


கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆக்கி போட்டி
x

கிருஷ்ணகிரியில் ஆக்கி போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு சார்பில், ஆண்களுக்கான ஆக்கி தொடர் போட்டிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தன. இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி மற்றும் கம்மம்பள்ளி ஆகிய ஊர்களில் இருந்து 6 அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமாசங்கர் வரவேற்றார். மாவட்ட அளவிலான இந்த போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.


Next Story