அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் விலையை குறைக்க வேண்டும். கியாஸ் விலை உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும். டீ, காபி, உணவு பொருட்கள் விலைவாசி உயர்வுக்கு காரணமான ஜி.எஸ்.டி.யை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சம்பத், துணை தலைவர் கணேசன், இளைஞர் அணி கார்த்தி, மகளிர் அணி மலர்வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story