அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்


அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்
x

திருப்பத்தூர் ரெயில்நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லவேண்டி பல்வேறு சங்கங்கள் சார்பில் சேலம்கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ரெயில்நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லவேண்டி பல்வேறு சங்கங்கள் சார்பில் சேலம்கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனு

திருப்பத்தூர் மாவட்ட பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம், பாத்திர வியாபாரிகள் சங்கம், ஜவுளி ரெடிமேடு வியாபாரிகள் சங்கம் சார்பில், பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.தெய்வசிகாமணி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் டி.சீனிவாசன் முன்னிலையில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

புதிய மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்ற பல்வேறு ஊர்களிலிருந்தும் வருகைதர வேண்டி உள்ளது. திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பத்தூரிலிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் ஜவ்வாது மலைவாழ் மக்கள், பொதுமக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பிற்காக சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஜோலார்பேட்டை ெரயில் நிலையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நின்று செல்ல வேண்டும்

எனவே திருப்பத்தூர் வழியாக செல்லும் அனைத்து ெரயில்களும் திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பெங்களூருவில் இருந்து வரும் ெரயில் 56122, அரக்கோணம், ஜோலார்பேட்டை வரும் ெரயில்களை திருப்பத்தூர் வரை நீட்டிக்க வேண்டும். அனைத்து ெரயில்களும் திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல மெயின் லைன் பிளாட்பாரத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் சம்பத், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார், பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் சுபாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story