அல்லித்துறை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


அல்லித்துறை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
x

அல்லித்துறை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

சோமரசம்பேட்டை, மே. 25-

சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கிராமத்தில் உள்ள செவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது, விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும்ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story