முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1998-ம் ஆண்டு பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவரும், புதுச்சேரி முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிபதியுமான கிறிஸ்டியான் பேசுகையில், ''முன்பு தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டித்து திருத்தினர். தற்போது தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது குறைந்ததால், மாணவர்களின் கல்வித்திறனும் குறைகிறது. மாணவர்களை தண்டிப்பது திருத்துவதற்குதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்'' என்று கூறினார்.

விழாவில் முன்னாள் மாணவ-மாணவிகள் 127 பேர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தாங்கள் பயின்ற வகுப்பறைகளில் அமர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story