பெண்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பயிற்சி
பெண்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிர்ஒளி திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சி பகுதிகளில் மருத்துவ சேவை பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் தொடக்கவிழா ஒருங்கிணைப்பாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஓட்டுனர் பயிற்சி முகாமை டாக்டர் தனலெட்சுமி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பயிற்சி பெற்றனர். மேற்பார்வையாளர்கள் ஹலிமா, முத்துமாரி, பாக்கியா உள்பட திட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story