சென்னை-ராமேசுவரம் வழித்தடத்தில் கூடுதல் ெரயில் இயக்க வேண்டும்


சென்னை-ராமேசுவரம் வழித்தடத்தில் கூடுதல் ெரயில் இயக்க வேண்டும்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை-ராமேசுவரம் வழித்தடத்தில் கூடுதல் ெரயில்களை இயக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய மனுவில் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரெயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரையிலும் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Related Tags :
Next Story