திராவிட மாடல் ஆட்சிக்கு கருணாநிதியே அடித்தளம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திராவிட மாடல் ஆட்சிக்கு கருணாநிதியே அடித்தளம் -  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் இன்று தொடங்கியது

சென்னை ,

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கருணாநிதி இன்னும் 5 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் விழா நாயகராக அமர்ந்திருப்பார். கருணாநிதி கண்காணிக்கிறார் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருந்க்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழாவை அடுத்த ஆண்டு ஜூன் 3 வரை கொண்டாட உள்ளோம். எந்தத் திட்டத்தை தொடங்கினாலும் கருணாநிதி என்னுடன் இருக்கிறார். நிகழ்கால செயல்பாடுகளின் எதிர்காலத்தை தீர்மானித்தவர் கருணாநிதி திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சில ர் பயப்படுகின்றனர். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடாது என்பவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர். திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர். ஏழைகள் நலம் பெறும் ஆட்சியை நடத்தியவர் கலைஞர் .கருணாநிதி என தெரிவித்தார்.


Related Tags :
Next Story