தேனி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் செயல்முறை கருத்தரங்கம்


தேனி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் செயல்முறை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 7 May 2023 6:45 PM GMT (Updated: 7 May 2023 6:46 PM GMT)

தேனி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் செயல்முறை கருத்தரங்கம் நடைபெற்றது.

தேனி

மயக்கவியல் மருந்தை நோயாளிகளுக்கு இடுப்பு, தண்டுவடம், நரம்பு உள்ளிட்ட பகுதிகளில், நேரடியாக கைகளால் சோதனை செய்து மயக்க மருந்து நிபுணர்கள் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது அல்ட்ரா சவுண்ட் பிரத்யேக கருவி மூலம் மயக்க மருந்து செலுத்துவதற்கு அகில இந்திய மயக்கமருந்து கழகம் முடிவு செய்து அதற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது.

அதன்படி தென் தமிழகத்தில் முதன்முறையாக அகில இந்திய மயக்கவியல் மருத்துவ கழகம் சார்பில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் செயல்முறை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அகில இந்திய மயக்கவியல் கழக செயலாளரான அரியானா மாநிலத்தை சேர்ந்த நரேஷ் மல்கோத்ரா தலைமையில், தமிழக மயக்கவியல் துறை செயலாளர் பரிமளாதேவி, தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மருத்துவ குழுவினர், இறந்த மனித உடல்களில் மயக்க மருந்து செலுத்தி செய்முறை விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் மருத்துவ மாணவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மயக்கவியல் துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Related Tags :
Next Story