பொன்னேரி அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல் - டிரைவர் பலி
பொன்னேரி அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
கர்நாடகா மாநிலம் பிஜப்பூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 25). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் பார்சல்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் புறப்பட்டார். இதனை அடுத்து நேற்று பொன்னேரி அடுத்த அத்திப்பேடு கிராமத்தின் வழியாகச் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் அவர் வந்து கொண்டிருந்த நிலையில், சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதினார்.
இந்த விபத்தி லாரியை இருந்த டிரைவர் சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் சிக்கி பலியாகி கிடந்த டிரைவர் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.