வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்.
திருச்சி
சமயபுரம்:
சமயபுரம் நால்ரோட்டில் மதுபான கடை ஒன்றின் பாரில் சேனியகல்லுக்குடியைச் சேர்ந்த பாபு (வயது 28) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் வீ.துறையூைர சேர்ந்த வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் ராஜு (என்ற) ராஜீவ்காந்தி, அருண், ராமு, அலெக்ஸ், லெட்சுமணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தேடப்பட்டு வந்த வீ.துறையூர் நீலமேகத்தின் மகன் வள்ளிஅருணன்(21) திருச்சி ஜுடிசியல் எண் 3-ல் நீதிபதி பாலாஜி முன்பு நேற்று சரணடைந்தார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story