புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பங்காரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு ஸ்ரீ லட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் புகையிலை பொருட்களை ஒழிப்பது, புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் பிடித்துபடி சென்றனர். கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சேரிசாலை, நான்குமுனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு, கடைவீதி வழியாக மந்தைவெளியில் முடிவடைந்தது. பேரணியில் கல்லூரி இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால், கால்நடை உதவி இயக்குனர் கந்தசாமி, கலைக்கல்லூரி முதல்வர் சிராஜ்தீன், கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், துணை முதல்வர்கள் சக்கிவேல், சசிகலா, பேராசிரியர் செந்தில்குமரன், உடற்கல்வி இயக்குனர் சரவணன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story