அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 8-ந் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 8-ந் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 8-ந் தேதி நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 8-ந் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், 10-ந் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 11-ந் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும், 12-ந் தேதி வரலாறு, பொருளியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவ- மாணவிகள், இணையதள விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், வங்கி சேமிப்பு கணக்கு, அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்-5 ஆகியவை கொண்டு வர வேண்டும்.

கல்லூரி சேர்க்கைக்கான கட்டணம்:- பி.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.3,215, பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு ரூ.3,195, பி.எஸ்சி. கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.2,615, பி.காம் பாடப்பிரிவுக்கு ரூ.3,195 செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.


Next Story