சலவை எந்திரத்தை எரித்தவர் கைது


சலவை எந்திரத்தை எரித்தவர் கைது
x

உடுமலை அருகே குடும்பத்தகராறில் சலவை எந்திரத்தை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

உடுமலை அருகே குடும்பத்தகராறில் சலவை எந்திரத்தை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத்தகராறு

உடுமலையை அடுத்த எஸ்.வி.மில் வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா (வயது 43). தனியார் கோழிப் பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து கணவரின் தம்பியான கணேஷ்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

 தற்போது மகள்கள் வளர்ந்து வருமானம் ஈட்டுவதால் மனைவி தன்னை மதிப்பதில்லை என்று கணேஷ்குமாருக்கு வருத்தம் இருந்துள்ளது. இதுசம்பந்தமாக அவர் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சம்பவத்தன்று மனைவியையும் மகள்களையும் வீட்டுக்குள் வைத்து கொன்று விடுவதாக மிரட்டி அடித்துள்ளார்.

சலவை எந்திரத்துக்கு தீ வைப்பு

இதனால் பயந்து போன சுஜாதா மகள்களுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த கணேஷ்குமார் வீட்டிலுள்ள பொருட்களுக்கு தீவைத்துள்ளார். உடனடியாக சுஜாதா குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

அதற்குள் வீட்டிலுள்ள சலவை எந்திரம் எரிந்து நாசமானது. இதுகுறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் சுஜாதா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கணேஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.


Related Tags :
Next Story