கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வாலிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜெகதேவி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அகிலன் என்ற அகில் (வயது 26). இவர், கிருஷ்ணகிரியில் சேலம் மேம்பாலம் அருகில் உள்ள கார்வேபுரம் பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப்பள்ளி, ஓசூர் ஹட்கோ, சிப்காட், போலீஸ் நிலைங்களில் கொலை, கொலை முயற்சி, பெட்ரோல் குண்டு வீச்சு, ஆள் கடத்தல், திருட்டு உள்பட 11 வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்திய அகிலனை கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் கைது செய்தார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அகிலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், சேலம் மத்திய சிறையில் உள்ள அகிலனிடம் வழங்கினார். இதையடுத்து போலீசார் அகிலனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story