பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மனுக்கள் குறைவு


பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மனுக்கள் குறைவு
x

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மனுக்கள் குறைந்தது.

பெரம்பலூர்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கி விட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வழக்கத்தை விட குறைவான மனுக்களை கூட்டத்தில் பெறப்பட்டது. அடுத்த வாரம் திங்கட்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. அடுத்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி தான் நடைபெறும்.


Next Story