வாலிபர் மீது தாக்குதல்
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பாதிரகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் புனிதவள்ளி. இவர் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது தம்பி வீரராகவன் (வயது 32) திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பஸ்சில் பாதிரகுடி வந்தபோது தனது செல்போன் வேலை செய்யவில்லை என்று தூக்கி எரிந்துள்ளார். அந்த செல்போன் பஸ்சில் வந்த அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது விழுந்தது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் ராஜநாகம் (40), இளையராஜா (30), விஜயரெங்கம் (37) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரும் வீட்டில் குளித்து கொண்டிருந்த தனது தம்பி வீரராகவனை அடித்து உதைத்து தெருவில் உள்ள மரத்தில் கட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாப்பிள்ளை, சிறுவன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.