அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x
தினத்தந்தி 5 Jun 2023 2:44 AM IST (Updated: 5 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், கள்ளிப்பட்டி, கீழ்வாணி, மூங்கில்பட்டி, வேம்பத்தி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 70 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி வாழைப்பழம் கிலோ ஒன்று ரூ28-க்கும், நேந்திரன் ரூ.29-க்கும் விற்பனை ஆனது. பூவன் (தார் ஒன்று) ரூ.450-க்கும், செவ்வாழை ரூ.620-க்கும், ரஸ்தாளி ரூ.430-க்கும், தேன்வாழை ரூ.400-க்கும், மொந்தன் ரூ.250-க்கும், ரொபஸ்டா ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் மொத்தம் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை, சத்தியமங்கலம், பெருந்துறை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.


Related Tags :
Next Story