ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


ஈரோட்டில்  மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x
ஈரோடு

ஈரோடு நாச்சியப்பா வீதியில் மாநகராட்சி திருமண மண்டபம் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபா் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவா், பெருந்துறை பூங்கம்பாடி சாணார்பாளையத்தை சேர்ந்த கவியரசு (வயது 38) என்பதும், அவர் ஓட்டி வந்தது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும், அவர் அளித்த தகவலின்படி ஏற்கனவே திருடிய 2 மோட்டார் சைக்கிள் என மொத்தம் 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசை கைது செய்தனர்.


Next Story