ஈரோட்டில்செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில்செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2023 7:30 PM GMT (Updated: 2 Jan 2023 7:30 PM GMT)

ஆர்ப்பாட்டம்

ஈரோடு

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயசுகி தலைமை தாங்கினார்.

கொரோனா சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட துணை செயலாளர் அர்னால்ட், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், மாநில தலைவர் சசிகலா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story