எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 26 July 2023 6:45 PM GMT)

எட்டயபுரத்தில் தாலுகா அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் பா.ஜ.க.வினர் நேற்று காலையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆத்திராஜ் தலைமையில் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் உள்ள எந்திரங்கள் சரிவர செயல்படாததால், பள்ளி மாணவ, மாணவியர் அதை சரி செய்ய வேண்டும் என்று பா.ஜ.க வடக்கு மாவட்ட தலைவர் தலைமையில், எட்டயபுரம் மண்டல தலைவர் சரவணகுமார் முன்னிலையில் நேற்று மாலையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ.க.வினர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story