பஸ் நிலையத்தில் உள்ளடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு


பஸ் நிலையத்தில் உள்ளடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:30 AM IST (Updated: 30 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அடுத்த வடக்கநந்தல் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துபவர்கள் போதை தலைக்கேறியதும், தகராறில் ஈடுபடுவதுடன், பஸ் நிலையத்தில் உள்ள பெண்களையும், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் கிண்டல் செய்கின்றனர். இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோாிக்கை விடுத்தும் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story