தூத்துக்குடி ஜாமியா பள்ளி வாசலில் அ.தி.மு.க.வினர் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை


தூத்துக்குடி ஜாமியா பள்ளி வாசலில்  அ.தி.மு.க.வினர் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஜாமியா பள்ளி வாசலில் அ.தி.மு.க.வினர் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை நடத்தினர்.

தூத்துக்குடி

தமிழகத்தில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டி தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசலில் உள்ள ஷேகு நூகு ஒலியுல்லா அப்பா தர்காவில் அ.தி.மு.க அவைத்தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ் மகன் உசேன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர். எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் மலர் போர்வை போர்த்தி சிறப்பு பிராத்தனை செய்தனர்.

பிரார்த்தனை நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என்.சின்னத்தரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாநில அமைப்புச் சாரா ஓட்டுரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story