மாநில தடகள போட்டியில் தேவகோட்டை மாணவர்கள் சாதனை
மாநில தடகள போட்டியில் தேவகோட்டை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
தேவகோட்டை,
திருவண்ணாமலையில் 63-வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஸ் ஆதித்யா 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 4X400 மீட்டர் இரண்டாமிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், முகமது அஸ்லாம் இதே பிரிவில் குண்டு எறிதலில் மூன்றாமிடமும், ஆகாஷ், சிவா, வசந்த்குமார் ஆகியோர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்று வந்தனர். இதில் ஹரிஸ் ஆதித்யா அகில இந்திய பள்ளிகளுக்கிடையான தடகள போட்டிகளில் 400 மீட்டர், நீளம் தாண்டுதல், 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழக அணியில் இடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி கொடுத்த உடற்கல்வி இயக்குனர் பூமிநாதன், உடற்கல்வி ஆசிரியர் சேவுகராஜன், சந்திரன் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பாராட்டினர்.