பெருந்துறையில் ஏ.டி.எம். எந்திரத்தில் கிடந்த ரூ.2 லட்சம்- யாரும் உரிமை கோராததால் போலீசாரிடம் ஒப்படைப்பு


பெருந்துறையில் ஏ.டி.எம். எந்திரத்தில் கிடந்த ரூ.2 லட்சம்- யாரும் உரிமை கோராததால் போலீசாரிடம் ஒப்படைப்பு
x

பெருந்துறையில் ஏ.டி.எம். எந்திரத்தில் கிடந்த ரூ.2 லட்சத்துக்கு யாரும் உரிமை கோராததால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் ஏ.டி.எம். எந்திரத்தில் கிடந்த ரூ.2 லட்சத்துக்கு யாரும் உரிமை கோராததால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தோப்புபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வங்கி இயங்கி வருகிறது. இங்குள்ள ஏ.டி.எம்.முக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆய்வக உதவியாளர் வாசுதேவன் என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது ஏ.டி.எம். எந்திரம் மீது ஒரு பை இருந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் துணியால் பணம் மூடப்பட்டு கட்டப்பட்டிருந்தது. இதனால் வாசுதேவன் அந்த பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

போலீசாரிடம் ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அவர் அந்த பணத்தை கல்லூரியில் உள்ள வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை வங்கி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அதில், கடந்த மாதம் 27-ந் தேதி காலை 8.30 மணி அளவில் ஒருவர் வந்து ஏ.டி.எம். எந்திரம் மீது பணத்தை வைத்துவிட்டு சென்றுவிட்டது பதிவாகியிருந்தது. ஆனால் அவர் திரும்ப வந்து பணத்தை எடுத்து செல்லவில்லை.

ஒரு மாதமாகியும் இதுவரை அந்த பணத்துக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து அந்த ரூ.2 லட்சம் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்தை விட்டு சென்றவர் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story