ரெயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி:வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரெயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி:வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:45 PM GMT)

ரெயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண் கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பணியில் இருந்த போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (27) என்பவர் அவரது அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து தென்காசி ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அனீஸ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ெரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தென்காசி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், அனீஸ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை நெல்லை ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.


Next Story