களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு


களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு, தெற்கே பனச்சகுழியை சேர்ந்தவர் விஜில்குமார் (வயது41), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் உள்ள தூற்றுக்குளத்தில் குளிக்க சென்றார். அவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது விஜில்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த 2 குழந்தைகளும் அலறியடித்து கொண்டு வீட்டுக்கு சென்று தந்தை நீரில் மூழ்கியது குறித்து உறவினர்களிடம் கூறினர். உடனே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி விஜில் குமாரை தேடினர். இறுதியில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய மனைவி ஷீபா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story