விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அவரது உருவ படத்திற்கு நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் லதா, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டத்தின் சார்பில் என் குப்பை என் பொறுப்பு எனும் கருத்தை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையிலான சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நகரமன்ற தலைவர் லட்சுமிபாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரோட்டரி சங்க தலைவர் கே.சதீஷ், செயலாளர் ஆர்.பி.ராஜா, நிர்வாகிகள் குணசீலன், பி.ஆர்.முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story