விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தொடங்கி வைத்தார். ஊர்வலமானது அரியலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது, குடிசை பகுதிகள், மருத்துவமனை பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது. அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்து ஒலி மாசுபாடு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நிலைய அலுவலர் செந்தில்குமார், செந்துறை, ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story