வன உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்வராயன்மலையில் வன உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள ஆரம்பூண்டி ஊராட்சியில் மலைவாழ் மக்களுக்காக வன உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கலந்து கொண்டு வன உரிமை சட்டங்கள் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு பயன் பெற வேண்டும் என்பது பற்றி மலை வாழ் மக்களிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மலைவாழ் மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இதில் பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் வைரமணி, பழங்குடியினர் நல தாசில்தார் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆன்டி, ஊராட்சி செயலாளர் அண்ணாமலை மற்றும் வனத்துறையினர், மலைவாழ்மக்கள் கலந்து கொண்டனர். மலைவாழ்மக்கள் பகலில் வேலைக்கு சென்று வருவதால், அவர்களின் வேலைக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.