விழிப்புணர்வு பேரணி
பொங்கல் விழா குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகள் சார்பாக புகையில்லா பொங்கல் விழா குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காரியாபட்டி பேரூராட்சி சார்பாக அமலா உயர்நிலைப்பள்ளியில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சிதலைவர் செந்தில் தலைமையிலும், செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர், கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியராஜன், தீபா, சங்கரேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பழைய குப்பைகள் சேகரிப்பு மையத்தை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். மேலும் புகையில்லா பொங்கல் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களிடையே கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல மல்லாங்கிணறு பேரூராட்சியில் மல்லாங்கிணறு சூரம்பட்டி, ரெட்டியபட்டி உள்பட 5 இடங்களில் குப்பைகழிவு சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. குப்பை சேகரிப்பு மையத்தை மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தலைமையிலும், செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலையிலும் தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.