நிர்பயா மையம் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - நடிகை சாய் பல்லவி பேச்சு
நிர்பயா மையம் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை சாய் பல்லவி கூறினார்.
சென்னை,
சென்னை, எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் நடிகை சாய் பல்லவி பேசியதாவது:-
நிர்பயா மையம் திறப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மையத்தில் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்த உடனே, நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மையம் குறித்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறுவயதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருவரிடம் கூறலாம் என்பதே மிகப்பெரிய ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்சினையை யாரிடம் தெரிவிக்க இயலாமல் மனவேதனைக்கு உள்ளாகும் பிள்ளைகளே அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஒரு எண்ணை தட்டினால் போதும் தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடன் பகிர்ந்து கொள்ள முடியம். இது அவ்வளவு ஈஸி இல்லை எல்லோருக்கும் இது போய் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.