அரக்கோணம்-வேலூர் கண்டோன்மெண்ட் இடையே மீண்டும் ரெயில் சேவை தொடக்கம்


அரக்கோணம்-வேலூர் கண்டோன்மெண்ட் இடையே  மீண்டும் ரெயில் சேவை தொடக்கம்
x

அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது.

ரெயில் சேவை நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்த போது ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது. நோய் பரவல் குறைந்ததால் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது தெற்கு ரெயில்வே புற நகர் ரெயில் சேவையினை படிப் படியாக வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுகளாக அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் இயக்கப்படாமலேயே இருந்தது.

பொதுமக்கள், ரெயில்வே தொழிற்சங்கம் (என்.எப்.ஐ.ஆர்,), ரெயில் பயணிகள் சங்கங்கள் சார்பில் அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையிலான ரெயில் சேவையினை மீண்டும் தொடங்க வலியுறுத்தி தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுதிருந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் சேவை ஜூலை 4-ந் தேதி முதல் சிறப்பு 'மெமு' எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்திருந்தது.

மீண்டும் தொடங்கியது

அதன்படி அரக்கோணத்தில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட்டிற்கு ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. சாதாரண ரெயிலாக இயக்கப்பட்ட இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அரக்கோணம் முதல் வேலூர் கண்டோன்மெண்ட் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரெயில் சேவை தொடங்கியதால் பயணிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் சாதாரண ரெயிலாக இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story